சேலத்தில் ரேவதி என்ற பெண் மீது அவரது கணவர் ஆசிட் வீசியுள்ளார். இதில் அப்பே சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.
சேலம் மாவட்டம் குகை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக அவரது மனைவி விவாகரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே ரேவதி தனது தாயுடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரது கணவர் ஏசுதாஸ் ரேவதி மீது ஆசிட்டை வீசி உள்ளார். இதில் ரேவதியின் முதுகுப்பகுதி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக சேலம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் தலைமறைவாக இருந்த இயேசுவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், ரேவதியின் தாயாருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…