போதையில் வந்த வாகனம் மோதியதால் உயிரிழந்த மனைவியின் சடலத்துடன் மதுக்கடையை மூடக்கோரி கணவர் போராட்டம் செய்தார்.
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி வழியாக கேரளா செல்லும் சாலையில் ஜம்புகண்டி என்னும் இடத்தில அரசுக்கு சொந்தமான டாஸ்மார்க் கடை ஓன்று இருந்து வருகிறது. இந்த கடையை மூடக்கோரி பலரும் கோரிக்கை வைத்த நிலையில் அரசு செவி சாய்க்கவே இல்லை. கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.இந்நிலையில், நேற்று அங்கு குடித்துவிட்டு போதையில் வந்த இருவர் சாலையில் வண்டியில் சென்று கொண்டிருந்த ஷோபனா என்பவரது வாகனம் மீதி மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதில் ஷோபனா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவரது மகள் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து வந்த ஷோபனாவின் கணவர் மருத்துவர் ரமேஷ் விபத்திற்கு காரணமான மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி மனைவியின் சடலத்துடன் சாலையில் நடுவே அமர்ந்து போராடாத் துவங்கினர். ரமேஷ் அவரது செயலுக்கு பொதுமக்கள் பலரும் ஆதரவு அளித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த சம்பவம் தீயாய் பரவ உடனடியாக அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் ரமேஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுக்கடையை உடனடியாக மூடுவதாகவும், விபத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவர் என்றும் கூறினர் இத ஏற்று ரமேஷ் மற்றும் போராட்டக்குழுவினர் போராட்டத்தை கை விட்டனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…