மனைவியின் சடலத்தை வைத்து மதுக்கடையை மூட போராடிய கணவர் !

Default Image

போதையில் வந்த வாகனம் மோதியதால் உயிரிழந்த மனைவியின் சடலத்துடன் மதுக்கடையை மூடக்கோரி கணவர் போராட்டம் செய்தார்.
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி வழியாக கேரளா செல்லும் சாலையில் ஜம்புகண்டி என்னும் இடத்தில அரசுக்கு சொந்தமான டாஸ்மார்க் கடை ஓன்று இருந்து வருகிறது. இந்த கடையை மூடக்கோரி பலரும் கோரிக்கை வைத்த நிலையில் அரசு செவி சாய்க்கவே இல்லை. கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.இந்நிலையில், நேற்று அங்கு குடித்துவிட்டு போதையில் வந்த இருவர் சாலையில் வண்டியில் சென்று கொண்டிருந்த ஷோபனா என்பவரது வாகனம் மீதி மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதில் ஷோபனா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவரது மகள் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

தகவலறிந்து வந்த ஷோபனாவின் கணவர் மருத்துவர் ரமேஷ் விபத்திற்கு காரணமான மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி மனைவியின் சடலத்துடன் சாலையில் நடுவே அமர்ந்து போராடாத் துவங்கினர். ரமேஷ் அவரது செயலுக்கு பொதுமக்கள் பலரும் ஆதரவு அளித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த சம்பவம் தீயாய் பரவ உடனடியாக அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் ரமேஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுக்கடையை உடனடியாக மூடுவதாகவும், விபத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவர் என்றும் கூறினர் இத ஏற்று ரமேஷ் மற்றும் போராட்டக்குழுவினர் போராட்டத்தை கை விட்டனர்.
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்