மனைவியின் சடலத்தை பார்த்து மனமுடைந்த கணவர்.! இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த கோர சம்பவம்.!

Default Image
  • ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாமியாருக்கும், மருமகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த மருமகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
  • மனைவியின் சடலத்தை பார்த்து மனமுடைந்த கணவர், இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் என்பவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், 2 வயதில் சஞ்சனா, மற்றும் ஒரு வயதில் ரித்திகா என்ற இரு பெண் குழந்தைகளும் இருந்தன. இதனிடையே நிர்மலாவுக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நிர்மலா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவலறிந்து சென்ற சோளிங்கர் போலீசார், நிர்மலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மனைவி தற்கொலை செய்துகொண்டதை அறிந்த கணவர் மதுரையிலிருந்து வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்துள்ளார்.

இந்நிலையில், மனைவியின் சடலத்தை பார்த்துவிட்டு மனமுடைந்து கதறி அழுத கணவர், இரு பெண் குழந்தைகளுடன் வாலாஜாபேட்டை ரயில் நிலையத்திற்கு சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் வெங்கடேஷ், அவருடைய குழந்தைகள் சஞ்சனா, ரித்திகா ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் மூன்று பேரின் உடல்களை கைப்பற்றிய வாலாஜா பேட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மனைவி உடல் இருந்த அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் குழந்தைகளுடன் கணவரும் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்