குழந்தை வெள்ளையாக பிறந்ததால் மனைவியை தலைவானியை வைத்து அமுக்கி கொன்ற கணவர்!

Default Image

கடலூர் மாவட்டத்தில் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜன்.இவரது மனைவி அமலா ஆவார்.இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 5 மாதத்தில் கைக்குழந்தை ஒன்று உள்ளது.

மேலும் ராஜன் அடிக்கடி அமலாவிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.மேலும் குழந்தை வெள்ளையாக இருப்பதால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து சித்ரவதை செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டிற்குள் இருந்து குழந்தை அழுகிற சத்தம் கேட்டுள்ளது.வெகு நேரம் ஆகியும் குழந்தை அழுகை நிற்காமல் கேட்டுக்கொண்டிருந்தாள்,அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டிற்குள் ராஜனையும் காணவில்லை.அமலா வீட்டில் படுத்திருந்துள்ளார்.அவரை அக்கம்பக்கத்தினர் எழுப்பியுள்ளனர்.ஆனால் அவர் எழுந்திராமல் இருந்துள்ளார்.

பின்பு அவர் இறந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் அமலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை தலைவாணியை வைத்து அமுக்கி யாரோ கொலை செய்ததை உறுதி செய்துள்ளனர்.

இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.ஆனால் அவரது கணவர் ராஜன் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு குழந்தை வெள்ளையாக இருந்ததால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது.

அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்