மனைவி இறந்த சோகத்தில் மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவர்!

Default Image

மதுரையில் உள்ள எஸ்.எஸ் காலனி பார்தசாரதி தெருவில் வசித்து வந்தவர் கார்த்திகேயன் ஆவார்.இவரது மனைவி பாரதி.இவர் ஒரு மாற்று திறனாளி ஆவார்.இவர்களுக்கு 15 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகன் உள்ளான்.

இந்நிலையில் உடல் நலம் சரியில்லாததால் பாரதி கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி உயிரிழந்துள்ளார்.இதனால் மனமுடைந்த கார்த்திக்கேயன், மனநலம் பாதித்த தன் மகனை விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதன் காரணமாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும் வீட்டில் சோதனை செய்தபோது, தற்கொலை செய்வதற்கு முன்பாக கார்த்திக்கேயன் எழுதிய 15 பக்கம் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகர துணை காவல் ஆணையர் சசிமோகன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மேலும் மனைவியின் இழப்பை தாங்க முடியாமல், மகனை கொலை செய்துவிட்டு கணவர் தானும் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE UPDATE
udhayanidhi stalin vijay Magizh Thirumeni
GSLV-F15 -ISRO
Vengavayal
CivilRights
Professor Arunan
gold price