புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு ஆலங்குடி அண்ணாநகரை சேர்ந்த சரண்யா என்ற என்பவருடன் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு சரண்யா காணாமல் போனதாக சரண்யாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் சரண்யா வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் சரண்யா பெற்றோர்கள் மதுரை மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை தொடர்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் சரண்யா கணவர் ரமேஷ் கொடுத்த தகவலின் சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மனைவி சரண்யா நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது நண்பர்களான பாட்ஷா , ரகு ஆகியோரிடம் ஒரு லட்சம் கொடுத்து தனது மனைவியை கொலை செய்யுமாறு கூறியதை அவர் ஒப்புக்கொண்டார். சரண்யாவை கொலைசெய்து சம்ராயன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசியதாக அவர் வாக்குமூலம் கொடுத்தார்.
பின்னர் ரமேஷ் தகவல் கொடுத்த இடத்திற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் ஜேசிபி மூலம் சுமார் 3 மணி நேரம் தோண்டிய பின்னர் சரண்யாவின் எலும்புக்கூட்டை எடுத்தனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் சரண்யாவின் எலும்புக்கூட்டை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
மேலும் கணவர் ரமேஷ் பாட்ஷா மற்றும் ரகு ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மனைவியை கணவரே ஆள் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…