கொரோனாவால் கணவர் உயிரிழந்ததால் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பதாக சென்னை பல்பொருள் அங்காடி மேலாளராக பணியாற்றிய பாஸ்கர் என்பவருடன் நித்தியா எனும் பெண்மணிக்கு திருமணமாகிய நிலையில், இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகனும், 6 வயதில் மக்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 2-ஆம் தேதி பாஸ்கருக்கு திடீரென பாதிப்பு ஏற்பட்டதால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பாஸ்கர் சிகிச்சைப் பலனின்றி கடந்த 9ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
எனவே, கணவர் இறந்த மன அழுத்தத்திலிருந்து நித்யா தனது மகன் மற்றும் மகளுடன் ஈரோட்டில் உள்ள தனது தந்தையின் தங்கியிருந்துள்ளார். ஆனால் அவரின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாத நித்தியா நேற்று மதியம் உணவில் விஷ மாத்திரையை கலந்து மகள் மற்றும் மகனுக்கு கொடுத்து தானும் அதை சாப்பிட்டு வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றுள்ளார். காலை 6 மணிக்கு பெற்றோர்கள் கதவை திறந்து பார்த்த பொழுது மகள் நித்தியா மற்றும் பேத்தி பேரன் ஆகியோர் மயங்கிக் கிடந்துள்ளார்.
இதனையடுத்து அவர்கள் இருந்த அறையில் விஷ மாத்திரையை இருந்ததால் மூவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் நித்தியா மற்றும் அவரது மகன் மகள் ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கணவன் இறந்த சோகம் தாங்க முடியாமல் இளம் வயதிலேயே பெண் தனது குழந்தைகளையும் கொன்று தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் "விடாமுயற்சி" திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும்…
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…