கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் ராஜேஷ்.இவர் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்.ஒருநாள் இவரது செல்போனுக்கு ஒரு மிஸ்ட் கால் வந்துள்ளது.
அந்த மிஸ்ட் காலை திரும்ப இவர் அழைத்து பேசும் போது ஒரு பெண் தவறுதலாக ராங் கால் செய்து விட்டதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.சில நாட்கள் கழித்து அந்த நம்பருக்கு திரும்ப அழைத்து நட்பு முறையில் பேசியுள்ளார்.
இவர்களுடைய நட்பு விரிவடையவே ராஜேஷ் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறியுள்ளார்.அதை தொடர்ந்து அந்த பெண் ராஜேஷிடம் தன் சொந்த ஊர் பணக்குடி என்றும் கணவனை இழந்து தனியாக வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
அந்த பெண்ணிற்கு ஆறுதல் கூறுவது போல் ராஜேஷ் பேசியதால் தன் அந்தரங்க விஷயங்கள் வரையிலும் அவரிடம் பேசியுள்ளார்.இவ்வாறு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது அந்த பெண்ணை நேரில் பார்த்து பேச விரும்புவதாக ராஜேஷ் கூறியுள்ளார்.
அப்போது அந்த பெண்ணை காவல்கிணறுக்கு வருமாறு கூறியுள்ளார்.அவரது பேச்சை நம்பி வந்த அந்த பெண்ணை அங்குள்ள ஒரு விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.அப்போது அந்த பெண்ணிடம் அங்கு வைத்தே திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
அதை நம்பிய அந்த பெண்ணும் அவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.அந்த வகையில் இருவரும் அடிக்கடி காவல்கிணறுக்கு வந்து செல்வதாக இருந்துள்ளனர்.ராஜேஷின் நடவடிக்கையில் அவரது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து சந்தேகம் அதிகமாகவே அவரின் மனைவி, தனது உறவினரை அழைத்து புலம்பியுள்ளார்.கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து அவர் எங்கு செல்கிறார் என்பதை கவனித்துவந்துள்ளனர்.
அப்போது காவல்கிணரில் உள்ள விடுதிக்கு அடிக்கடி செல்கிறார், அவர் பின்னாடியே வேறு ஒரு பெண்ணும் அறைவரைக்கும் செல்வதை அறிந்த அந்த நபர் தொலைபேசி மூலம் ராஜேஷின் மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தமது உறவினர்களையும் அழைத்து கொண்டு விடுதிக்கு வந்த மனைவி கையும் களவுமாக இருவரையும் பிடித்து கோபத்தில் ராஜேஷை அடித்து மிதித்துள்ளார்.அவருடன் இருந்த பெண்ணையும் உதைத்து தள்ளியுள்ளார்.
இந்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது அந்த பெண்,தமக்கு திருமணம் ஆகவில்லையென்று ராஜேஷ் தம்மை ஏமாற்றியதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இருவரையும் எச்சரித்து காவல்துறையினர் அனுப்பிவைத்துள்ளனர்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…