யுடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
யுடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த விவகாரத்தில், கோமதியின் கணவர் லோகநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் வசிக்கும் லோகநாதன் என்பவர் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 1 வருடத்திற்கு முன்பு கோமதி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.
அவர் மனைவி கர்ப்பமான நிலையில், அவரது மனைவிக்கு கடந்த டிச.13 ஆம் தேதி குழந்தை பிறப்புக்கான டெலிவரி தேதி மருத்துவர் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும்,குறிப்பிட்ட தேதியில் அவர் மனைவிக்கு பிரசவ வலி ஏற்படவில்லை.
இந்நிலையில்,கடந்த 18 ஆம் தேதி அப்பெண்ணுக்கு பிரசவ வலி திடீர் என்று ஏற்பட்ட நிலையில்,லோகநாதன் தனது அக்கா கீதாவின் உதவியுடன் மனைவிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்துள்ளார்.அப்போது ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. மேலும், அவரது மனைவிக்கும் உடல்நிலை மோசமானதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மாவட்ட சுகாதார துணை இயக்குனர் விசாரணைக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து, கோமதியின் கணவர் லோகநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)