தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் இவரது மனைவி முருகவள்ளி, சண்முகம் கட்டிட தொழிலாளி, இவர்கள் இருவருக்கும் தமிழ்செல்வன் ரபிஷியா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலை யில் சண்முகம் மற்றும் முருகவள்ளி ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சமதமில்லாமல் திருமணம் செய்தனர்.
மேலும் திருமணம் முடிந்த பிறகு தூத்துக்குடி மாவட்டம் ஜாகீர்உசேன் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவியுடன் வசித்து வந்தார், மேலும் முருகவள்ளி அடிக்கடி தொலைபேசியில் பேசுவதை வைத்து கணவன் சண்முகம் நடத்தையில் சந்தேகபட்டு திட்டியுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே தினமும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வெளிய முருகவள்ளி வரவில்லை மேலும் இதனால் சந்தேகம் அடைந்த அங்குள்ள அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. உடனே கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு முருகவள்ளி நைலான் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்நிலையில் மேலும் இந்த சம்பவம் நடந்ததை போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர் இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முருகவள்ளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சண்முகம் தனது மனைவியை கையிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார், இதையடுத்து சண்முகராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…