நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் வசித்து வந்தவர் ராமதாஸ் இவர் அப்பகுதியில் மர பட்டறை கடை வைத்துள்ளார், மேலும் இவருக்கு லீலாவதி என்ற மனைவி உள்ளனர், மேலும் ஒரு மகன் உள்ளார் நிலையில் ராமதாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்து தனது மகனுடன் வசித்து வந்தார் மேலும் மர பட்டறை மேல் மாடியில் உள்ள வீட்டில் லீலாவதி மட்டும் தனியாக வசித்து வந்தார் .
இந்நிலையில் ராமதாஸ் மர பட்டறைக்கு வரும்போது ராமதாஸிற்கும் அவரது மனைவி லீலாவதிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது இதனால் இது தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் ராமதாஸ் மீது லீலாவதி புகார் அளித்தார், மேலும் புகாரின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ,மேலும் பேச்சுவார்த்தை நடந்து முடிந்து நேற்று முன்தினம் அதிகாலை ராமதாஸ் மகன் மர பட்டறைக்கு வந்த சமயத்தில் லீலாவதி வாலிபர் ஒருவருடன் இருந்ததாகக் கூறப்படுகிறது .
இதனால் ராமதாஸ் தகராறு செய்துள்ளார், மேலும் அந்த சமயத்தில் ராமதாஸ் மனைவி லலீதாவிற்கும் ராமதாஸிற்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது, இந்த சண்டையில் ராமதாஸ் தனது மனைவி லீலாவதியை கத்தியால் குத்தினார், மேலும் இதில் லீலாவதி உயிரிழந்தார்.
மேலும் ராமதாஸ் கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்தார் இந்த நிலையத்தில் மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து ராமதாஸ் கூறியது எனது மனைவியை பிரிந்து மூன்று வருடங்களுக்கு மேலாக எனது மகனுடன் வாழ்ந்து வந்தேன் எனது மனைவியின் நடத்தை சரியில்லை பலருடன் தொடர்பில் இருந்தார் நான் பலமுறை எச்சரித்தும் எனது மனைவி கேட்கவில்லை மகன் பெரியவன் ஆகி விட்டான் அவனுக்காகவாது திருந்த வேண்டும் என்று கூறியும் எனது மனைவி திருந்தவில்லை.
மேலும் என்னிடம் அக்கம்பக்கத்தினர் சொல்லும்போது கூட நான் அமைதியாக தான் இருந்தேன் நான் பெற்ற மகனே பார்க்கும் அளவிற்கு நடந்து கொண்டதால் எனக்கு பிடிக்கவில்லை நான் அதனால் ஆத்திரத்தில் கத்தியை எடுத்து குத்தி கொலை செய்தேன் என்று கூறியுள்ளார் மேலும் லீலாவதி உடன் இருந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…