“கெட்டவுட் கவர்னர்”- 7 பேர் விடுதலை குறித்து மனிதநேய கட்சியின் பொது செயலாளரின் அதிரடி பேச்சு!

Default Image

7 பேர் விடுதலை குறித்து மனிதநேய கட்சியின் பொது செயலாளர் தமீமுன் அன்சாரியின் அதிரடி பேச்சு.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யபட்ட 7 பேரின் விடுதலை குறித்து பல தலைவர்களும், பொதுமக்களும் விடுதலை செய்யுமாறு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாகையில், செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மனிதநேய கட்சியின் பொது செயலாளர் தமீமுன் அன்சாரி, உச்சநீதிமன்றம் அளித்த கருத்தின்படி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கும், பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கைக்கும், சம்பந்தமில்லை என்று சொல்லியிருக்கிறது.

இதனால், தமிழக கவர்னர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றும், ஆளுநர் தாமதிக்கும் பட்சத்தில், மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர், அமைச்சர்கள் கொண்ட குழுவை கூட்டி, ஆணை பிறப்பிக்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும், இவர்கள் உரிய தண்டனை காலத்தை விட அதிகமாக தண்டனை பெற்றுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,  இனியும் ஆளுநர் தாமதித்தால், ‘கெட்டவுட் கவர்னர்’ என்ற முழக்கத்தோடு,  தமிழகத்தில் இருக்கக் கூடிய அனைத்து ஜனநாயக  சக்திகளும், ஒன்று சேரக் கூடிய சூழல் ஏற்படும். இதை தவிர்க்க முடியாது. மனிதாபிமான அடிப்படையில், தமிழக அரசு 7 பேரையும், ஒரு குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய கட்சியின் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்