பல்வீர் சிங் ஏப் 3.ல் ஆஜராக மனித உரிமைகள் ஆணையம் சம்மன்!
பல்வீர் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் தர மனித உரிமை ஆணையம் உத்தவு.
பல் பிடுங்கிய புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணை கைதிகளின் குற்றசாட்டு குறித்து ஏப்ரல் 3-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர சஸ்பெண்டான ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங், பல்வேறு குற்றங்களில் கைது செய்யப்படும் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து, மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சமயத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.