சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து 3-வது நாளாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையத்தினர் நெல்லை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு பிரேத பரிசோதனை செய்ததன் அடிப்படையில் விசாரணை நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.