தீபாவளி பண்டிகையின் போது ரூபாய் 200 முதல் 250 கோடி மதிப்பிலான இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயம் – அமைச்சர் நாசர்
ஆவின் மூலம் தீபாவளி பண்டிகையின் போது ரூபாய் 200 முதல் 250 கோடி மதிப்பிலான இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயம்.
பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள ஆவின் கால்நடை தீவன தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ஆவின் மூலம் தீபாவளி பண்டிகையின் போது ரூபாய் 200 முதல் 250 கோடி மதிப்பிலான இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்தாண்டு ரூ.85 கோடி மதிப்பிலான இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது.
நடப்பு ஆண்டு தரமான மூலப் பொருள்களைக் கொண்டு இனிப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆவின் விற்பனை கூடங்களில் ஆவின் பொருளைத் தவிர வேறு பொருள்கள் விற்கக் கூடாது. இன்று கூட பஜ்ஜி போண்டா விற்பனை செய்ததற்காக இரண்டு கடைகள் விழுப்புரத்தில் சீல் வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.