சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போர் மாபெரும் வெற்றி! – திருமாவளவன்
சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன்.
சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. விசிக, இடதுசாரிகள் சார்பாக சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்., மதிமுக, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொண்டன.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போர் மாபெரும் வெற்றி! பங்கேற்ற கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கும் ஆதரவளித்த மக்களுக்கும் மனமார்ந்த நன்றி!’ என தெரிவித்துள்ளார்.
சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போர் மாபெரும் வெற்றி!
பங்கேற்ற கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கும்
ஆதரவளித்த மக்களுக்கும் மனமார்ந்த நன்றி!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!#சமூகநல்லிணக்க_மனிதசங்கிலி pic.twitter.com/kX95fZZjzi
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 12, 2022