கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காலிப்பாளையம் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்போது அந்த தொட்டியில் அதிர்ச்சியூட்டும் வண்ணம் மனித எலும்புகள் கிடந்துள்ளது.
இதனையடுத்து, சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் தொட்டியில் இருந்து அகற்றி, இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் மனித எலும்புகள் வைத்த இடத்தில் இருந்து காணாமல் போய்விட்டது. இதனை தொடர்ந்து, இது தொடர்பாக போலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
GROUP VII-A தேர்வுக்கான தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி!
இந்த நிலையில், எலும்புகளை யார் எடுத்து சென்றது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் யார் எலும்புகளை போட்டது என்பது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் ஈடுபட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வருடம் டிசம்பர் 26ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் இறையூரை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியில் சில விஷமிகள் மனித கழிவுகளை கலந்தனர். பொதுமக்கள் குடிக்கும் தண்ணீரில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது கோவையில் நடந்துள்ள இந்த சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…