கோவையில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித எலும்புகள்..! தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்..!

investigation

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காலிப்பாளையம் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்போது அந்த தொட்டியில் அதிர்ச்சியூட்டும் வண்ணம் மனித எலும்புகள் கிடந்துள்ளது.

இதனையடுத்து, சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் தொட்டியில் இருந்து அகற்றி, இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் மனித எலும்புகள் வைத்த இடத்தில் இருந்து காணாமல் போய்விட்டது. இதனை தொடர்ந்து, இது தொடர்பாக போலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

GROUP VII-A தேர்வுக்கான தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி!

இந்த நிலையில்,  எலும்புகளை யார் எடுத்து சென்றது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் யார் எலும்புகளை போட்டது என்பது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் ஈடுபட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் 26ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் இறையூரை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியில் சில விஷமிகள் மனித கழிவுகளை கலந்தனர். பொதுமக்கள் குடிக்கும் தண்ணீரில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது கோவையில் நடந்துள்ள இந்த  சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்