பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாத்துப் பெருக்குகின்ற இயற்கைத் தோழன், யானை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மூன்று மாத காலமாக முதுகில் காயத்துடன் யானை ஓன்று சுற்றித்திரிந்தது. ஜனவரி 19-ஆம் தேதி உயிரிழந்த யானையின் மீது டயரில் தீ கொளுத்தப்பட்டு வீசப்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியானது. இந்த வீடியோ காட்சி பார்க்கும் பலருக்கும் மிகுந்த வேதனையை தருவது போல் உள்ளது.
இதனையடுத்து, இந்த கொடூர செயலை செய்த, நீலகிரி பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். டயரில் தீ வைத்து யானையின் மீது வீசிய சம்பவத்தில் ரிசார்ட் உரிமையாளர் ரைமன் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பலரும் யானை மீது தீ கொளுத்தி வீசியது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாத்துப் பெருக்குகின்ற இயற்கைத் தோழன், யானை! சிறிதும் மனிதத்தன்மையற்று யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் நீலகிரியில் நடந்திருக்கிறது. இத்தகைய வன்செயல்களில் ஈடுபடும் மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…