சாலையில் வரையப்பட்ட பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம்….! அதிகாரிகள் பாராட்டு…!
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், ஓவியர் சங்கம் சார்பில் சீர்காழி பேருந்து நிலையம் அருகே பிரம்மாண்டமான கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், ஓவியர் சங்கம் சார்பில் சீர்காழி பேருந்து நிலையம் அருகே பிரம்மாண்டமான கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட இந்த ஓவியத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஓவியர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பு செயலாளர் ஞானவேல் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு பிரமான ஓவியத்தை வரைந்தனர். மேலும், நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி, காவல் துணை கண்காணிப்பாளர் யுவப்பிரியா மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஓவிய சங்கத்தினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.