தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் சிவகங்கை மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா.
எச்.ராஜாவின் ஆரம்பகால அரசியல் பயணங்கள் :
மகாத்மா காந்தியின் மீதான துப்பாக்கி சூட்டிற்கு பிறகு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டபோது தமிழகத்தில் அதனை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களுல் ஒருவர் H.ராஜாவின் தந்தை ஹரிஹரன். H.ராஜா படித்தது அரசியலில் ஈடுபட தொடங்கியது அனைத்தும் காரைக்குடியில் தான். காரைக்குடியில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்துள்ளார். இவர் முதலில் தனது தந்தையின் வழிகாட்டுதலின் படி ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, ஆர்.எஸ்.எஸ்.இல் தன்னை இணைத்து கொண்டு பணியாற்ற தொடங்கினார். 1989-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இலிருந்து பாஜகவில் இணைந்து கொண்டார் எச்.ராஜா. ஆரம்பத்திலேயே சமஸ்கிருதமும், ஹிந்தியும் தெரிந்ததால், வடக்கே உள்ள பாஜக தலைவர்களிடையே நெருக்கமாக இப்போது வரையில் உள்ளார். அரசியல் வளரதொடங்கிய காலத்திலும், முக்கிய பொறுப்பில் இருக்கும் காலம் வரையில் பல சரச்சைகளை கிளப்பி வருகிறார் எச்.ராஜா.
இவர் மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு 1999ஆம் வருடம் இரண்டாம் இடமும், 2014ஆம் வருடம் 3ஆம் இடமும் பெற்றுள்ளார்.
அதேபோல சட்டமன்ற தேர்தலிலும், 2001–ஆம் ஆண்டு காரைக்குடி தொகுதியில் திமுகவுடன் கூட்டணி அமைத்து நின்று 48.08 சதவீத வாக்குகள் பெற்று வென்றுள்ளார். 2006இல் ஆலங்குடி தொகுதியில் 4ஆம் இடமும், 2016இல் தியாகராஜ நகரில் நான்காம் இடமும் பெற்றுள்ளார்.
ஏற்கனவே சிவககை தொகுதியில் நின்று அனுபவம் உள்ளதால், இந்த முறை அதிமுக கட்சியின் கூட்டணி பலத்தோடு போட்டியிடுகிறார் எச்.ராஜா.
இவர்மீது 2014ஆம் ஆண்டு பெரியார், முஸ்லீம்கள், கிருஸ்டியர்கள் என அனைவரையும் தவறாக பேசியதாக கூறி எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது. அண்மையில் கூட சென்னை உயர் நீதிமன்றம், தமிழக காவல்துறைக்கு எச்.ராஜா மீது எஃப்.ஐ.ஆர் போடுமாறு உத்தரவு பிறப்பத்திருந்தது. இரு தரப்பு மக்களிடையே பகை மூட்டும் விதமாக பேசி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்து.
மேலும் , மத்திய அரசு திட்டங்களை விமர்சனம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் பத்திரிக்கையாளராக இருந்தாலும் அவர்களை உடனே ஆன்டி இந்தியன் என கூறுவதும் இவரது வழக்கம்.
பிரதமர் நரேந்திர மோடியை பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் மதிமுக தலைவர் வைகோ. இவரது பேச்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எச் ராஜா, ‘வைகோ மோடியை பற்றி இவ்வாறு பேசிவிட்டு ஒழுங்காக வீடு போய் சேர முடியுமா?!, பாஜக தலைவரை இவ்வாறு பேசிவிட்டால் என்ன செய்யவேண்டும் என பாஜக தொண்டனுக்கு தெரியும் கூறி சரச்சையை கிளப்பினார். அதற்கு திமுக தலைவர் மு.கருணாநிதி கடும் கண்டணங்களை தெரிவித்த பிறகு தான் அவரது சர்ச்சை பேச்சுக்களை மீடியா பார்க்க ஆரம்பித்தது.
அதன் பிறகும் கூட ஒரு பேட்டியில், முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதால் தேர்வுகளில் ஈஸியாக காப்பி அடிக்க முடிகிறது. ஆதலால் பர்தாவை தடை செய்ய வேண்டும் என்று கூறி மீண்டும் மீண்டும் சர்ச்சைகளில் சிக்கினார் எச்.ராஜா. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. சில முஸ்லீம் அமைப்புகள் மதநல்லினக்கத்தை கெடுக்கும்படி பேசி வரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றது.
சென்ற வருட தீபாவளியன்று விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி பற்றிய விமர்சனத்துக்கு, விஜயின் வாக்காளர் அடையாள அட்டை படத்தை தனது இணைதள பக்கத்தில் பகிர்ந்து அதில் அவரது பெயர் C.ஜோசப் விஜய் என பகிர்ந்தது மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது.
இந்த சர்ச்சைகள் இவரது தமிழக செல்வாக்கை வெகுவாக பாதித்து இவரது ஒவ்வொரு கருத்தும் இணையத்தில் பேசும் பொருளாக மாறியது. இது இன்னொரு சிறிய தேர்தலிலும் வெளிப்பட்டது. தேசிய சாரணர் அமைப்புக்கான தலைவர் தேர்தலில் 286 இல் 52 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார்.
அவரது சர்ச்சைகளுக்கு சான்றான இன்னொரு சம்பவம் , திரிபுராவில் கம்யூனிஸ்ட் தலைவருள் ஒருவரான லெனின் அவர்களின் சிலையை உடைக்கப்பட்டது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த சமயத்தில் எச்.ராஜா தனது இணையதள பக்கத்தில் , யார் அந்த லெனின்? கம்யூனிஸ்டுகளுக்கு இந்தியாவில் என்ன வேலை ? நேற்று லெனின் சிலை , நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பதிவிட அதற்கு பல கட்சிகளும் தங்களது பலத்த எதிர்ப்பை காட்டினர். அதற்கு எச்.ராஜா தரப்பிலிருந்து, அந்த பதிவு தான் போடவில்லை தன்னுடைய அட்மின் தான் போட்டார் என கூறப்பட்டிருந்தது. இதுவும் இணையத்தில் பெரும் பேசும் பொருளாக இருந்தது.
உங்கள் பகுதி தலைவர்களையும், உங்கள தொகுதியையும் பற்றி மேலும் அறிய இணைந்திருங்கள் தினசுவடுடன்!
DINASUVADU
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…