ஸ்டாலின் எப்படி செய்வார்., முடியுமா? அதற்கான விவரத்தை சொல்ல சொல்லுங்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு

Default Image

வாக்குறுதி அளிப்பதற்கு முன்பு தமிழக பட்ஜெட் விவரங்களை முக ஸ்டாலின் அறிந்து கொள்ளுமாறு அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுரை செல்லூரில் கபடி வீரராகள் சிலையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுயிடம் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது என்றும் வாக்குறுதி அளிப்பதற்கு முன்பு தமிழக பட்ஜெட் விவரங்களை முக ஸ்டாலின் அறிந்து கொள்ளுமாறு விமர்சித்துள்ளார்.

முதலில் தமிழக பட்ஜெட்டில் இது செய்ய முடியுமா? எப்படி தள்ளுபடி செய்வார் என்று விவரத்தை சொல்ல சொல்லுங்கள் என்றும் வாய் புளித்தது, மாங்காய் புளித்தது என்று ஒரு அறிவிப்பை அறிவிக்க கூடாது என தெரிவித்துள்ளார். எதாவது சொல்லிட்டு போறதுக்காக ஸ்டாலின் சொல்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்