ராகுல் காந்தி  பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி?அறிக்கை தர கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர் உத்தரவு

Published by
Venu
  • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
  • சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி  பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி?  அறிக்கை தர கல்லூரி இணை இயக்குனருக்கு, கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

திமுக கூட்டணியில்  காங்கிரஸ் , மதிமுக , விசிக, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , ஐஜேகே ஆகிய கட்சிகள் உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 13-ஆம் தேதி  தமிழகம் வந்தார்.பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.அதேபோல் நாகர்கோவிலில்  ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவைத்தார்.இதில் ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியது தொடர்பாக கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர் ரா. சாருமதி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி  பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி? என்றும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது எப்படி அனுமதிக்கலாம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும்  நேரில் விசாரித்து அறிக்கை தர சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு, கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர் ரா. சாருமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

 

Published by
Venu

Recent Posts

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

11 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

11 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

11 hours ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

12 hours ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

12 hours ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

13 hours ago