கொரோனாவால் இறந்தவரின் உடலை கையாளுவது எப்படி ? தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

Default Image

கொரோனாவால் இறந்தவரின் உடலை கையாளும் முறையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

 

இறந்தவரின் உடலை வாகனத்தில் எடுத்துச் செல்லும் வழிமுறைகள்:

  • இறந்தவர்களின் உடலை பிளாஸ்டிக் பையை கொண்டு முழுமையாக  சுற்றி வைக்க வேண்டும். அந்த பிளாஸ்டிக்  பையின் மேல்புறத்தில் 1% சோடியம் ஹைப்போ குளோரைடு கொண்டு கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

 

  • இறந்தவர்களின் உடலை கையாளும் பணியாளர்கள் கட்டாயமாக சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும்  கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.

 

  • இறந்தவரின் உடலை தகனம் செய்யும் இடத்தில் ஒப்படைத்த பின் அந்த வாகனத்தை முழுமையாக 1% சோடியம் ஹைப்போ குளோரைடு கொண்டு தெளிக்க வேண்டும்.

தகனம் /அடக்கம் செய்யும் இடத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் :

  • தகனம் /அடக்கம் செய்யும் இடத்தில் இருக்கும்  பணியாளர்கள் கட்டாயமாக சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும்  கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.

 

  • இறந்தவரின் முகத்தை உறவினர்கள்  பார்க்க விரும்பினால், பணியாளர் முகத்தை மட்டும் திறந்து காட்ட வேண்டும். பணியாளர்களை தவிர வேறு யாரும் உடலை கையாள அனுமதிக்கக்கூடாது.

 

  • இறந்தவரின் உடலை தொடாமல் மேற்கொள்ளப்படும் மத சடங்குகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

 

  • கொரோனாவால் இறந்தவர்களின் உடலை  குளிப்பாட்டவோ, கட்டிப்பிடிக்கவோ, முத்தமிடவோ அனுமதியில்லை. 

 

  • தகனம் / அடக்கம் செய்யும் போது பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்க அனுமதி. குறிப்பாக சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

 

  • உடலை தகனம் செய்யத பின் சாம்பலை குடும்பத்தினருக்கு வழங்கலாம். அதில் எந்தவித ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்