வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்தவருக்கும் ரூ.6000 நிவாரணம்.! எப்படி விண்ணப்பிக்காலம்.?

Tamilnadu CM MK Stalin - Michaung Cyclone relief fund

சென்னை மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களும் 6000 ரூபாய் நிவாரண தொகை பெறலாம் எனவும் அதற்கான வழிமுறைகளும் வெளியாகியுள்ளன.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகராட்சி முழுவதும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பெரும்பாலான கடலோர பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்தோர் பெரிதாக பாதிக்கப்பட்டனர். இன்னும் புறநகரில் சில பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்றும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

எங்கள் வரிப்பணம் தானே..? அவங்க அப்பன் வீட்டு பணத்தையா கேக்குறோம்.? – அமைச்சர் உதயநிதி விளாசல்.!

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் நிவாரண தொகையை அறிவித்தார். சென்னை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்களுக்கும் ரூ.6000 நிவாரண தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால், மேற்குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் ரேஷன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு மட்டுமே நிவாரண தொகை வழங்கப்படும் என்றும், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் எப்படி விண்ணப்பிப்பது என்ற கேள்வியும் எழுந்தது. ஏனென்றால் சென்னை சுற்றுவட்டாரத்தில் குறிப்பாக புறநகர் பகுதியில் அதிகம் இருப்பது வெளிமாவட்டத்தை சேர்ந்த மக்கள். அவர்கள் ரேஷன் கார்டு முகவரி வெளியூரில் இருக்கும். அவர்கள் இங்கு தங்கி இருந்து வேலை பார்த்து வருவர்.

இதனை குறிப்பிட்டு, வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களும் 6000 ரூபாய் நிவாரண தொகை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

  • தாங்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ரேஷன் கடையில் நிவாரண தொகை விண்ணப்பம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • அந்த விண்ணப்பத்தில் பெயர், தற்போதுள்ள முகவரி , ரேஷன் கடை எண் ஆகியவை நிரப்ப வேண்டும்
  • நிரப்பிய விண்ணப்பத்தை ரேஷன் கடையில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • அதன் பிறகு அரசு அதிகாரிகள் தற்போது தங்கியுள்ள வீட்டிற்கு வந்து நேரில் ஆய்வு செய்வர்.
  • ஆய்வுக்கு பின்னர் 6000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ தகவல் வருவாய்த்துறை மூலம் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்