மே மாத மின் கட்டணத்தை எப்படி கணக்கிடுவது?- இணையதளத்தில் மின் வாரியம் விளக்கம்…!

மே மாத மின் கட்டணத்தை எப்படி கணக்கிடுவது? என்று இணையதளத்தில் தமிழக மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகத் தீவிரமடைந்த நிலையில்,கடந்த 2 வாரங்கள் பொது முடக்கம் அமலில் இருந்தது.பின்னர்,மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக,மின்சார வாரிய ஊழியர்கள்,மே மாதத்துக்கான மின் கணக்கீடு செய்ய வீடுகளுக்கு நேரில் செல்வதை தவிர்த்தனர்.
இதனால்,நுகர்வோரே தங்களது மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து,வாட்ஸ்அப் மூலம் மின் வாரியத்திற்கு அனுப்பிவைத்தால்,மின் செயற்பொறியாளர்கள்,மின் பயன்பாட்டைக் கணக்கீடு செய்து,அதற்குரிய கட்டணத்தை தெரிவிப்பார்கள்.பிறகு மின் கட்டணத்தை செலுத்தலாம். அல்லது 2019-ம் ஆண்டு மே மாத கட்டணத்தையே செலுத்தலாம்.அந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக நுகர்வோர் கருதினால்,கடந்த மார்ச் மாத கட்டணத்தை செலுத்தலாம் எனவும்,அந்த கட்டணம், ஜூலையில் முறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
மேலும்,மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் வழங்குவதாக தமிழக மின்வாரியம் தெரிவித்தது.இதற்கிடையில் ,மின்கட்டணம் செலுத்துவது தொடர்பாக, நுகர்வோரிடையே பல்வேறு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,மே மாதத்திற்கான மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படும் என்ற விபரத்தை,தமிழக மின்சார வாரியம், https://www.tangedco.gov.in/ என்ற அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025