சென்னை சென்ட்ரலில் கடத்தப்பட்ட குழந்தை செங்கல்பட்டு காப்பகத்தில் வந்தடைந்தது எப்படி?! கடத்தல் நிமிடங்கள்…
ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னையில் கட்டடவேலை செய்து வருகின்றனர் ராம் சிங், நீலாவதி தம்பதியினர். இவர்களின் மூன்று வயது குழந்தைதான் கடத்தப்பட்ட சோம்நாத். இவர்கள் வேலையை முடித்து சொந்த ஊருக்கு செல்ல சென்னை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து குழந்தை சோம்நாத் கடத்தப்பட்டுள்ளான். உடனே ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.
பின்னர் சென்னை சென்ட்ரலில் கடத்திய குழந்தையை தாம்பரம் ரயில் நிலையத்தில் தூக்கி சென்றது சிசிடிவி காமிராவில் பதிவாகி இருந்தது. பின்னர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிஸாருக்கு, திருப்போரூர் பேருந்து நிலையத்தில் குழந்தை அழுதுகொண்டிருந்தது தெரியவந்தது.
பின்னர் குழந்தையை மீட்ட போலீசார் செங்கப்பட்டில் உள்ள குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் குழந்தையின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு பின்னர் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையை கடத்திய நபரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்தான். இவன், சென்னை குழந்தையை திருடியதும், தாம்பரம் ரயில் நிலையத்தில் குழந்தையுடன் இறங்கி சென்றதும் கண்காணிப்பு கேமிராவில் தெரிந்தது. இந்த வீடியோ அனைத்து ரயில் நிலையத்திலும் பிரசுரமாக பதறிய குழந்தை கடத்தல்காரன் திருப்போரூர் பேருந்து நிலையத்தில் குழந்தையை விட்டுவிட்டு ஓடிவிட்டான்.
பிறகு தனது ஊருக்கு தப்பி செல்ல ரயில் நிலையத்தில் வந்து நோட்டமிட்டபோது போலீசார் இவனை கைது செய்துள்ளனர்.