“ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்?”- எல்.முருகன்
ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? எனவும், அவர் மக்களை ஏமாற்றுவதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நடைபெற்றது. நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யவேண்டுமென மத்திய அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், சென்னை கிண்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல் முருகன், ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாகவும், 2010-14 வரை காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் இருந்ததாகவும், அப்பொழுதுதான் நீட்தேர்வு கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.