திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக என்று சொல்லவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23-ஆம் ஆண்டிற்கான எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தொடர்பான கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி வாசித்தார். அதில், 2021-22-ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36,013.14 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் கடந்தாண்டை விட நடப்பாண்டில் மார்ச் வரை ரூ.2,200 கோடி டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கேள்வி நேரத்தின்போது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. நிர்வாக குறைபாடுகளால் தான் மின் வெட்டு நிலவி வருவதாகவும், போதுமான அளவிற்கு நிலக்கரி கையிருப்பு வைத்து கொள்வதற்கு தமிழக அரசு தவறிவிட்டது என்று அதிமுக உறுப்பினர் தங்கமணி எழுப்பிய கேள்விக்கு, 2021 திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் எந்த இடத்திலும் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக தமிழகத்தில் குறைக்கப்படும் என சொல்லவில்லை என்றும் போதுமான அளவு நிலக்கரியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்குவதில்லை எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…