#TNBudget2021: தமிழ்நாடு பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு!
தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் முக்கிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு.
தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பல திட்டங்கள் குறித்த தகவல்கள் பட்ஜெட் உரையில் இடம்பிடித்திருந்தது.
அதன்படி, தமிழ்நாடு பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு:
- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு.
- சீர்முக்கு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு.
- சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4807 கோடி ஒதுக்கீடு.
- மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு 959.20 கோடி ஒதுக்கீடு.
- தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உறுதி செய்ய ரூ.20 ஆயிரம் கோடி.
- கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
- மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலன் மேம்பாட்டுக்கு ரூ.1149.79 கோடி ஒதுக்கீடு.
- தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த மொத்தம் ரூ.6607.17 கோடி ஒதுக்கீடு.
- தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடியும், தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடியும் ஒதுக்கீடு.
- முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு 959.20 கோடி ஒதுக்கீடு.
- புரட்சி தலைவர் எம்ஜிஆர் மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ.1,725.41 கோடி ஒதுக்கீடு.
- காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு.
- பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.1,360 கோடி ஒதுக்கீடு.
- தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.13 கோடி ஒதுக்கீடு.
- விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி செல்ல சாலை பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
- கொரோனா நிவாரண தொகுப்பு ரூ.9,370.11 கோடி ஒதுக்கீடு.
- கலைஞர் பெயரில் நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
- உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி ஒதுக்கீடு.
- 25 கலை கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு 10 கோடி ஒதுக்கீடு.
- பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு.
- சுற்றுலா துறைக்கு 187.59கோடி ஒதுக்கீடு. 300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.
- ஜல் ஜீவன் இயக்கம் மூலம் கிராமப்புறங்களில் 1.27 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
- நீதித்துறைக்கு ரூ.1,713 கோடி நிதி ஒதுக்கீடு.
- மத்திய அரசின் தூய்மை பாரத இந்தியா திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.
- நெடுஞ்சாலைகள் துறைக்கு ரூ.17,899.17 கோடி ஒதுக்கீடு.
- 2021 – 22 ஆம் ஆண்டிற்குள் 200 குளங்களை தரம் உயர்த்த ரூ.111.24 கோடி ஒதுக்கீடு.
- 1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி நிதி ஒதுக்கீடு.
- மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.1046.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- விவசாயத்திற்கான இலவச மின்சாரம், மானியம் மற்றும் மின் துறை இழப்புகளுக்காக ரூ.9,872.77 கோடி ஒதுக்கீடு.
- வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்வு.
- தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்க ரூ.433 கோடி ஒதுக்கீடு.
- கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்.
- பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைப்பு.
- ஒருங்கிணைந்த குழைந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.2,356 கோடி ஒதுக்கீடு.
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கான ரூ.225.62 நிதி ஒதுக்கீடு.
- கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் ஏழைகளுக்கான இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு ரூ.490 கோடி ஒதுக்கீடு.
- திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ஓய்வூதிய திட்டத்திற்காக ரூ.1.50 கோடி ஒதுக்கீடு.
- இந்த ஆண்டு 100 திருக்கோவில்களில், நந்தவனம் ஆகியவற்றை சீரமைக்க 100 கோடி ஒதுக்கீடு.