திமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளது?முதலமைச்சர் பழனிசாமி
திமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,திமுக ஆட்சி காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது? என்றும் எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். வெளிநாட்டு பயணத்தின் மூலம் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன .
தொழில் துவங்க எப்படியும் 3 அல்லது 4 ஆண்டுகள் ஆகும். அதிமுக ஆட்சியில் ரூ.53 ஆயிரம் கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.தமிழகத்தில் தொழில் தொடங்க வெளிநாட்டு தொழிலதிபர்கள் முயற்சித்து வருகின்றனர்.கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
உபரி நீரை சேமிக்க ரூ.600 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம், ஒரு சொட்டு நீர் கூட வீணாக கூடாது என்பதே எங்கள் நோக்கம். 1,869 ஏரிகளை பரமாரிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.