தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மதியம் சுமார் 2.30 மணி நேரம் அவர்களது சந்திப்பு நடைபெற்ற நிலையில், இன்று ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக சந்திப்பு நடந்துள்ளது.
இது சந்திப்பின் போது, தவெக தற்போது இருக்கும் வாக்கு சதவீதம் 2026 தேர்தலுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும் இதில், தவெகவின் வாக்கு வங்கி குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், வீட்டிற்கு ஒரு வாக்கை உறுதி செய்ய பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
இந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் 28 அணிகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக அதில் குழந்தைகள் அணி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான பட்டியலில், “குழந்தைகள் அணி, பெண்கள் அணி, திருநங்கைகள் பிரிவு, காலநிலை ஆய்வு பிரிவு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரிவு என மொத்தம் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை ஒன்று தவெக ஐடி விங்க் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
கட்சியின் துணைப் பிரிவுகள்
- தகவல் தொழில்நுட்பப் பிரிவு
- வழக்கறிஞர்கள்பிரிவு
- ஊடகப் பிரிவு
- பிரச்சாரம் மற்றும் பேச்சாளர்கள் பிரிவு
- பயிற்சி மற்றும் பணியாளர் மேம்பாட்டுப் பிரிவு
- உறுப்பினர் சேர்க்கைப் பிரிவு
- காலநிலை ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு
- வரலாற்றுத் தரவு ஆராய்ச்சி மற்றும் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு
- திருநங்கைகள் பிரிவு
- மாற்றுத்திறனாளிகள் பிரிவு
- இளைஞர்கள் பிரிவு
- மாணவர்கள் பிரிவு
- பெண்கள் பிரிவு
- இளம் பெண்கள் பிரிவு
- குழந்தைகள் பிரிவு
- பணியாளர்கள் பிரிவு
- வர்த்தகர்கள் பிரிவு
- மீனவர்கள் பிரிவு
- நெசவாளர்கள் பிரிவு
- ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பிரிவு
- தொழிலாளர்கள் பிரிவு
- தொழில்முனைவோர்கள் பிரிவு
- இந்தியாவில் வசிக்காதர்கள் பிரிவு
- மருத்துவர்கள் பிரிவு
- விவசாயிகள் பிரிவு
- கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியப் பிரிவு
- தன்னார்வலர்கள் சாரி AITVMI அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்
“தவெகவில் 28 அணிகள்”
தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியல் வெளியீடு;
மூன்றாம் பாலினத்தவர், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன pic.twitter.com/TjFvbE9lVw
— தமிழக வெற்றிக் கழகம் (செய்திகள்) (@TVK_CbeNorth) February 11, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)