வரும் சட்டமன்ற தேர்தலில் 178 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பிரதான கட்சியான அதிமுக, திமுக தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்ய தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி ஒருபக்கம் அதிமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உறுதி செய்து வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமாவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
மறுபுறம் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுடன் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. அண்ணா அறிவாலயத்தில் இன்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்துள்ளது. நாளை மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இதனிடையே, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 25, இந்திய கம்யூனிஸ்ட் 7, மார்க்சிஸ்ட் 7, மதிமுக 5, விசிக 5 இடங்கள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொ.ம.தே.க 2, தமிழக வாழுரிமை 1 இடம் வரை ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் 178 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வரும் தேர்தலில் 56 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்க திமுக திட்டமிட்டு இருப்பதாகவும், மதிமுக, விசிகவுக்கும் தலா ஒரு தொகுதி குறையவும், திமுகவுக்கு 2 தொகுதிகள் அதிகரிக்கவும் அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் அதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…