சென்னையில் எத்தனை பேருக்கு கொரோனா.! மண்டலவாரிய பட்டியல் வெளியீடு .!
சென்னையில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மண்டலவாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் , உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை 1937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 570 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று தமிழகத்தில் மட்டும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 47 பேர் சென்னைவாசிகள் , 4 பேர் மதுரையை சார்ந்தவர்கள், ஒருவர் விழுப்புரத்தை சார்ந்தவர், இந்நிலையில் சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மண்டலவாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது.