இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்திடுவார் .? – முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்களில் ஒருவன் எனும் நிகழ்வு மூலம் மக்களின் கேள்விகளுக்கு தனது அரசின் செயல்பாட்டை, தனது நிலைப்பாட்டை பதிலாக அறிவிப்பது வழக்கம். அப்படி முதல்வர் பதில்கள் கூறிய உங்களில் ஒருவன் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. அதன் வீடியோ முதல்வரின் அதிகாரபூர்வ டிவிட்டர் தள பக்கத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை : அதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அதில் முக்கியமாக ஒரு கேள்வியாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவுக்கு தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி கையெழுத்திடாமல் இருப்பது குறித்து அந்த நிகழ்வில் கேட்கப்பட்டது.
தற்கொலை விவரங்கள் : அதற்கு பதில் கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , ஆன்லைன்ஸ் சூதாட்டத்தால் அதில் அடிமையாகி அதில் இருந்து மீள முடியாமல் பலர் தற்கொலை செய்து கொள்ளும் செய்தி தினந்தோறும் நாளிதழில் வருகிறது. அது ஆளுநருக்கு தெரியவில்லையா.?சென்னை வியாசர்பாடியில் ஒரு இளைஞன் தான் வேலை செய்யும் இடத்தில் கையாடல் செய்து ரம்மி விளையாடி தோற்றுள்ளார். இந்த விஷயம் அவரது அம்மாவுக்கு தெரிந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல், பள்ளிபாளையத்தில் ஒரு ரியாஸ்கான் எனும் இளைஞர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை பறிகொடுத்து, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அடுத்து, உடையார்பாளையம் பகுதியில் பிரபு என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இன்னும் எத்தனை உயிர்கள்.? : மதுரையை சேர்ந்த குணசீலன் எனும் கல்லூரி மாணவர் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டார். இந்த அத்தனை தற்கொலையும் கடந்த ஒரு வார காலத்திற்குள் நடந்துள்ளது. இந்த செய்திகள் ஆளுநருக்கு தெரியவில்லையா. இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் ஆளுநர் கையெழுத்து போடுவார்.
முதல்வர் கண்டனம் : உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில், அவர்கள் இதற்கு சட்டம் இயற்ற கூறியதன் பெயரில் சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அவசர சட்டத்திற்கு கைய்யெழுத்திட்ட ஆளுனர், சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவுக்கு 3 மாதமாக ஆகியும் இன்னும் கையெழுத்திடாமல் இருக்கிறார். என கட்டமாக தனது பதிலை உங்களில் ஒருவன் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…