இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை? உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
சென்னையில் பேனர் மேலே விழுந்ததில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பேனர் விவகாரத்தில் தமிழக அரசு மீது டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம்.அந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.
- இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் ?
- சுபஸ்ரீயை இழந்து நிற்கும் பெற்றோருக்கு அரசு என்ன செய்யப்போகிறது?
- பேனர் வைத்து அழைத்தால்தான் அரசியல்வாதிகள் வருவார்களா?
மேலும் குற்றம் நடக்க அனுமதித்துவிட்டு பின்னர் குற்றவாளிகள் பின்னால் ஓடுவதையே அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள கட்சி கொடிகளை உடனே அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொடிகளை அகற்றி விட்டு பிற்பகலில் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ,காவல் அதிகாரிகள் இன்று மதியம் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.