திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க பெறவில்லை. மக்களுக்காக இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக தான்.
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, எதிர்க்கட்சி தேர்தல் எடப்பாடி பழனிசாமி அவர்கள், திருப்பத்தூரில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், இந்த 4 மாதங்களில் திமுக அரசு, அதிமுக கட்சிக்காரர்கள் மீது வழக்கு போடுவது, அவதூறு பிரச்சாரம் செய்வது, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெயிடு பண்ணுவது இதைத்தான் அவர்களுடைய பணியாக இருக்கிறது. மக்களை பற்றி சிந்திக்கவில்லை. இவர்களுடைய ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க பெறவில்லை. மக்களுக்காக இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக தான். நான் நினைத்திருந்தால் திமுக மீது எவ்வளவோ வழக்குகள் போட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது? என்பது மக்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…