M.P venkatesan Neet [Representative Image]
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் முடிவடையும் நிலையில், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை கடந்த 9-ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நவ.25-ஆம் ஏத்தி இந்த தேர்தல் நடைபெறும் என தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.
இதற்காக 51,756 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 5.25 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த 5 மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேவ் உதானி ஏகாதசி” க்காக ராஜஸ்தான் தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தமிழர் திருநாளான பொங்கல் திருநாளன்று அறிவிக்கப்பட்ட SBI தேர்வை மாற்றச்சொல்லி கடைசி வரை போராடினோம். ஆனால் மமதையோடு மாற்ற மறுத்தது ஒன்றிய அரசு. தமிழகத்தின் மீது தான் எத்தனை வகையான வஞ்சகம்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…