#TNAgriBudget2022: வேளாண் பட்ஜெட்டில் எவற்றுக்கெல்லாம் எத்தனை கோடி ஒதுக்கீடு! இதோ உங்களுக்காக!

Published by
பாலா கலியமூர்த்தி

2022-23-ஆம் ஆண்டுக்கான வேளாண்மைக்கென தனி பட்ஜெட்டை இரண்டாவது முறையாக வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் வேளாண்மை மற்றும் விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் என முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விவசாயம் சார்ந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திமுக அரசு தாக்கல் செய்யும் முதல் முழுமையான வேளாண் பட்ஜெட் இது என்பதாகும்.

தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23 – எவற்றுக்கெல்லாம் எத்தனை கோடி ஒதுக்கீடு:

  • பயிர்காப்பீடு திட்டத்திற்கு பட்ஜெட்டில் மாநில அரசின் பங்காக ரூ.2,339 கோடி ஒதுக்கீடு.
  • இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு.
  • மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் புதிதாக செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.71 கோடி ஒதுக்கீடு.
  • நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
  • விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு.
  • சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க ரூ.28.50 கோடி ஒதுக்கீடு.
  • விவசாயிகளின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதற்கு நடப்பாண்டில் ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு,குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
  • கரும்பு சாகுபடி ஊக்குவிப்புக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.
  • சர்க்கரை ஆலைகளில் ஆய்வகத்தின் நவீனமயமாக்கல் & தானியங்கி எடைகள் அமைக்க ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கீடு.
  • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவிற்கு ரூ.5,157 கோடி ஒதுக்கீடு.
  • தேனீ வளர்ப்பு தொகுப்புக்கு ரூ.10.25 கோடி ஒதுக்கீடு.
  • பனை மேம்பாட்டிற்காக ரூ.2.65 கோடி ஒதுக்கீடு.
  • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 3,204 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
  • தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு 38,000 ஏக்கர் பரப்பளவில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.27.51 கோடி ஒதுக்கீடு.
  • சென்னை, திருச்சியில் நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
  • 50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு.
  • காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க ரூ.2 கோடியும், பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு.
  • திண்டிவனம், தேனி, மணப்பாறையில் பிரமாண்ட உணவுப்பூங்கா அமைக்கப்படும், இதற்காக ரூ.381 கோடி ஒதுக்கீடு.
  • காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.
  • பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.
  • முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகளுக்கு ரூ.65.34 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 145 சூரிய சக்தி உலர்த்திகளுக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு.
  • வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு.
  • தேசிய ஊரக பொருளாதார மாற்றத் திட்டத்தின் மூலம் 3 லட்சம் வேளாண் சார்ந்த வாழ்வாதாரப் பணிகளுக்கு ரூ.42.07 கோடி நிதி ஒதுக்கீடு.
  • மானாவரி நில மேம்பாட்டுக்கு ரூ.139 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட ரூ.2,546 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சிறப்பு நிதியாக ரூ.5 கோடி ஒதுக்கீடு.
  • வேளான் சந்தை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தமிழகத்தில் மரம் வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு.
  • மஞ்சள், இஞ்சி இடுபொருட்களுக்கு ரூ.3 கோடி ஒதுக்கப்படும்.
  • கருப்பட்டி உட்பட்ட பனை சார்ந்த மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்திக்கு ரூ.75 கோடி ஒதுக்கப்படும்.
  • பூண்டு சாகுபடியை அதிகரிக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படும்.
  • தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.1245.65 கோடியில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • வேளாண் துறைக்கு ஒட்டுமொத்தமாக 33,007.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23 – முக்கிய அம்சங்கள்:

  • கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையானது டன்னுக்கு ரூ.195 உயர்த்தித் தரப்படும்.
  • 60 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்பாய்கள் 5 கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.
  • நெல் ஜெயராமன் மரபுசார் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் மூலம் 20,000 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் வழங்கப்படும்.
  • வேளாண் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.
  • வேளாண்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
  • முதலமைச்சர் தலைமையில் சிறுதாணிய திருவிழா தொடர்ந்து நடத்தப்படும். 19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும்.
  • விவசாய கூலித் தொழிலாளர்களை வட்ட, மாவட்ட அளவில் ஒருங்கிணைக்க புதிய திட்டம் தொடங்கப்படும்.
  • கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை டன்னுக்கு ரூ.195 உயர்த்தி வழங்கப்படும். கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2,950 ஆக நிர்ணயம்.
  • ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தையில் மாலையில் சிறு தானியங்கள், பயறு வகைகளை விற்பனை செய்ய அனுமதி.
  • விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் பனை மரக்கன்றுகள் வழங்கப்படும்.
  • சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (MSME) மூலம் சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க ரூ.1.5 கோடி வரை மூலதன மானியம்.
  • கைபேசி மூலம் இயக்கிடும் வகையில் தானியங்கி பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவிகள், 50% மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.5,000 மானியத்தில் வழங்கப்படும்.
  • விவசாயிகளுக்கு பெரிய அளவில் உதவும் வகையில் “தமிழ் மண் வளம்” என்ற இணையதளம் உருவாக்கப்படும்.
  • தமிழகம் முழுவதும் 38 கிராமங்களில் ரூ.95 கோடி செலவில் மதிப்புக்கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் மையம் அமைக்கப்படும்.
  • மயிலாடுதுறையில் ரூ.75 லட்சத்தில் மண் பரிசோதனைக் கூடம் அறிவிக்கப்படும்.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

33 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

42 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

51 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

59 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

1 hour ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago