சட்டப்பேரவை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் சொத்து மதிப்பில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா முதலிடம் பிடித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா அறிவிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதிக் தயாளிடம் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது, அவர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் சொத்து விவரங்கள் குறித்து தெரியவந்துள்ளது. இசக்கி சுப்பையாவின் பெயரில் அசையும் சொத்து ரூ.3.79 கோடி, மனைவி மீனாட்சி பெயரில் ரூ.3.06 கோடி என மொத்தம் அசையும் சொத்து மதிப்பு ரூ.6.86 கோடி இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதுபோன்று அசையா சொத்துக்கள் தனது பெயரில் ரூ.208.96 கோடியும், மனைவி பெயரில் ரூ.30.93 கோடி என மொத்தம் ரூ.239.9 கோடி இருப்பதாக கூறப்படுகிறது. வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு கணக்குப்படி இசக்கி சுப்பையாவின் மொத்த சொத்துக்கள் ரூ.246.76 கோடி உள்ளன.
கடந்த 2011ம் ஆண்டு இசக்கி சுப்பையா தாக்கல் செய்யப்பட்ட மொத்த சொத்துக்கள் மதிப்பு ரூ.60.02 கோடியாக இருந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது. அதிக சொத்து வைத்துள்ள வேட்பாளர் பட்டியலில் அண்ணா நகர் திமுக வேட்பாளர் எம்கே மோகனை பின்னுக்குத்தள்ளி அதிமுக வேட்பாளராக இசக்கி சுப்பையா முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 15ம் தேதி வரை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ரூ.176 கோடி மதிப்புள்ள சொத்துதுகளும், அக்கட்சியின் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் மகேந்திரன் ரூ.160 கோடி சொத்து மதிப்புகளுடன் முதல் 5 இடங்களில் உள்ள நிலையில், முதலிடத்தை அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…