‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ – இந்த பாடல் திமுகவுக்கு பொருந்தும் – ஜெயக்குமார்
மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர் பாடிய ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் திமுகவிற்கு தான் பொருந்தும்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னையில் வேளச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் நேற்று வெளியிடப்பட்ட விடுதலை போராட்ட வீரர்களின் பட்டியலில் அழகுமுத்துக்கோன் பெயர் இடம்பெறாதது யாதவர் சமூகத்தை அவமதிக்கும் விதமாக அமைந்துள்ளது.
திமுக அமைச்சரவையில் உள்ள யாதவ சமூகத்தைச் சேர்ந்த ராஜகண்ணப்பன் பெரியகருப்பன் கோபத்தில் ராஜினாமா செய்வார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் நிதிநிலை சீரடைந்த பிறகு தரப்படும் என்று முதலமைச்சர் கூறுவது போகாத ஊருக்கு வழி தேடும் கருத்து. மத்திய அரசு உயர்த்தி கொடுத்த அகவிலைப்படியை, மாநில அரசு உயர்த்தி தரவில்லை. அதிமுகவினர் உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று பேசமாட்டோம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர் பாடிய ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் திமுகவிற்கு தான் பொருந்தும் என்றும், ஆண்டுதோறும் நிதி நிலை அறிக்கையில் நிதி அதிகரிப்பது இயல்பானது தான். வேளாண் தனி நிதிஅறிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால் கூட்டுப்பண்ணை போன்றவை நாங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.