பூஜ்யம் மதிப்பெண்களை பெற்றுள்ளது எப்படி சாத்தியமாகும் ? கனிமொழி
ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த அருகதையற்றவர்கள் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய் அக்சய் என்ற மாணவர் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த நிலையில் , அண்மையில் வெளியான நீட் தேர்வு முடிவில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்திருந்தது , பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே சாய் ஓஎம்ஆர் ஷீட் நகலை வைத்து தனக்கு 500 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்.நீட் தேர்வு முடிவால் மாணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.மேலும் இதில் முறைகேடு நடந்துள்ளது என்றும் அவர் கூறி உள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான செய்தியை பதிவிட்டு திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,2020 நீட் தேர்வில் நடந்துள்ள குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கிறது. பள்ளியில் முதலாவதாக வந்த சென்னையை சேர்ந்த மாணவர் சாய் அக்ஷய், நீட் தேர்வில் வெறும் பூஜ்யம் மதிப்பெண்களை பெற்றுள்ளது எப்படி சாத்தியமாகும் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இதே போல கோவை மற்றும் அரியலூரில் குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த அருகதையற்றவர்கள், மருத்துவக் கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதே போல கோவை மற்றும் அரியலூரில் குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த அருகதையற்றவர்கள், மருத்துவக் கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கையாக உள்ளது. 2/2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 21, 2020