மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யும் அரசு அவர்களையே இழிவுபடுத்துவது எந்தவகையில் நியாயம்? – டிடிவி தினகரன்

ttv dinakaran

தி.மு.க மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது என டிடிவி தினகரன் ட்வீட். 

வேலூர் மாவட்டத்தில் நடந்த விழா பெண்களுக்கான ரூ.1000 உரிமை தொகை குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசியது தற்போது உள்ளது. இதற்க்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், ‘தி.மு.க மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது. 1000 ரூபாய் உதவி பெறும் மாணவிகள், தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுநிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் திரு.துரைமுருகன் பேசியதற்கு பல்வேறு பிரிவினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யும் அரசு அவர்களையே இழிவுபடுத்துவது எந்தவகையில் நியாயம்? இலவசங்கள் தர வேண்டும் என்று பொதுமக்கள் யாரும் இவர்களிடம் கேட்கவில்லை. ஆட்சியைப் பிடிப்பதற்கு தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைத்தான் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.

பெண்களை இழிவுபடுத்தும் சமூகம் மட்டுமல்ல, பெண்களை அவமதிக்கும் ஆட்சியாளர்களும் நீடித்திருந்ததாக சரித்திரம் இல்லை. பெண்களை அவமதிக்கும் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை!’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்