மருத்துவப்பணிக்கான ஊழியர்களைத் தேர்வு செய்வதில் போகிற போக்கில் தவறு நிகழ்ந்தது எப்படி என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் நிறுவனம் மூலம் கொரோனா தடுப்புப் பணிக்கு சுகாதாரத்துறை ஒப்பந்த பணியாளர் நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது .ஆனால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது.
அந்த, புகாரில் 3 மாத ஒப்பந்த பணிக்கு 1 மாத ஊதியத்தை கேட்பதாக கூறப்பட்டது. இதனால், தனியார் நிறுவனம் மூலம் கொரோனா தடுப்புப் பணிக்கு பணியாளர்களை நியமிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,கூடுதலாக மருத்துவர்கள்,செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களைத் தற்காலிகமாக நியமிப்பதற்கான திடீரென ‘ஜென்டில்மேன் ஹெச்.ஆர்’ (GENTLEMAN HR) என்ற தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டதாக தகவல்கள் வெளியாயின.அந்த நிறுவனமோ, ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு மாதிரி தமது பெயரைப் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. விளம்பர அறிவிப்பு, பணிநியமனத்திற்கான ஆணை, நிறுவனத்தைப் பற்றிய தகவல் குறிப்பேடு என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக பெயரை அந்த தனியார் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியம் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பணியை, முன் பின் தெரியாத ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான முடிவை எடுத்தது யார்? அனுபவம் இல்லாத நிறுவனம் தகுதியில்லாதவர்களை நியமித்திருந்தால் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மருத்துவப்பணிக்கான ஊழியர்களைத் தேர்வு செய்வதில் போகிற போக்கில் தவறு நிகழ்ந்தது எப்படி?இதற்குப்பின்னணியில் இருப்பவர்கள் யார்?RAPID TEST KIT-ல் ஆரம்பித்து,தற்போது மருத்துவப்பணியாளர் நியமனம் வரை மனசாட்சியின்றி ஆட்சியாளர்கள் புகுந்து விளையாடுவதாக எழும் புகாருக்கு விளக்கம் என்ன? என்றும் மக்களின் நலன் கருதி சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து இது பற்றி விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த "விடுதலை 2" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை…
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…
சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…