உயர் நீதிமன்ற விசாரணை முடியாமல் நாங்கள் எப்படி தலையிட முடியும்- அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி.!
உயர் நீதிமன்ற விசாரணை முழுமையாக முடியாமல் நாங்கள் எப்படி தலையிட முடியும் என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது மற்றும் ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்றம் ஏற்றது சட்டவிரோதம் எனவும், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவு பெறாமல் நாங்கள் இதில் எப்படி தலையிடமுடியும் என உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறைக்கு கேள்வியெழுப்பியுள்ளது.