“வரியே வசூலிக்காவிட்டால் ஆட்சி எப்படி நடத்த முடியும்” – நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ..!

Default Image

வரியே வசூலிக்காவிட்டால் ஆட்சி எப்படி நடத்த முடியும்;ஜீரோ வரி என்பது அர்த்தமற்றது என்றுதமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவை பற்றி விவரம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இதற்குமுன் 2001ல் அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனையடுத்து,செய்தியாளர்களிடம்  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:

“வரியே வசூலிக்காவிட்டால் ஆட்சி எப்படி நடத்த முடியும்?,சரியான அளவு வரியை சரியான நபர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய அரசின் நோக்கம்,அரசாங்கத்தின் திறமை.

எனவே  சரியான வரியை வசூலித்து மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.மேலும்,ஜீரோ வரி என்பது அர்த்தமற்றது. ஏனெனில்,பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கு மட்டுமே ஜீரோ வரி முறை பயன்தருகிறது.மாறாக,ஏழைகளுக்கு பலன் அளிக்கவில்லை “,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்