எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க!வேட்பாளர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் மலர்தூவி வரவேற்ற திமுகவினர்
ஜேசிபி இயந்திரம் மூலம் வேட்பாளர்களை திமுக ஆதரவாளர்கள் வரவேற்றது அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.
அதேபோல் வேட்பாளர்கள் கடந்த சிலநாட்களாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.பின்னர் வேட்புமனு மீதான பரிசீலனையும் செய்யப்பட்டது.ஆனால் இது ஒருபுறம் மறுபுறம் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் வேட்பாளர்களை திமுக ஆதரவாளர்கள் வரவேற்றது அந்த பகுதியில் இருந்தவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்போரூர் இடைத்தேர்தல் தொகுதி திமுக வேட்பாளர் இதயவர்மன் போட்டியிடுகிறார்.அதேபோல் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வம் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் கேளம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிக்க இவர்கள் 2 பேரும் சென்றனர்.அந்த சமயத்தில் கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த திமுகவினர் அவர்கள் மீது ஜேசிபி இயந்திரம் மூலமாக மலர் தூவி வரவேற்றுள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் ஜேசிபியின் கூர்மையான பாகம் பட்டுவிடுமோ என்ற பயத்தில் வேட்பாளர்கள் பயந்தபடியே குனிந்துக்கொண்டே வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.மேலும்இந்த செயல் அங்கு கூடியிருந்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.