வீடு கூட சொந்தமாக இல்லாத இன்றய அரசியல் தலைவருக்கு கிடைத்த அடி… வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் இருந்தவரை வெளியேற்றி அவமதித்த அவலம்…
இந்திய நாட்டில் காமராஜரை போன்று ஒரு சிலரை தவிர மற்ற அரசியல்வாதிகள் சொகுசு வீடு,சொகுசு கார்,ஒன்றிற்க்கு பல மனைவிகள் என பகட்டாய் வாழும் இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு சிபிஐ கட்சியின் மூத்த மற்றும் முன்னால் தலைவர் நல்லக்கண்ணு மிகவும் எளிமையானவர் என பெயர் பெற்றவராவார்.இவர் கட்சி மாநாடுகளுக்கும் கூட்டங்களுக்கும் அரசு பேருந்திலே பயணம் செய்யும் ஒரே அரசியல் தலைவர் என்றும் கூறலாம் அந்த அளவிற்க்கு எளிமையானவர்.இவர் தற்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருந்து அவர் திடீரென அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டார்.இந்த மனித நேயமற்ற செயல் பலதரப்பட்ட அரசியல் தலைவர்களால் இந்த விவகாரம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜவாஹிருல்லா நல்லகண்ணுவை வீட்டு வசதி வாரிய குடியிருப்பிலிருந்து வெளியேற்றியது கண்டனத்திற்குரியது என்றார்.மேலும் கருத்து தெரிவித்த அவர்,மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு குடியிருப்பு ஒதுக்காமல் மற்றவர்களை போன்று வெளியேற்றியது கடும் கண்டனத்திற்குரியது என்றார்.மேலும், நல்லகண்ணுவிற்கு தமிழக அரசு உடனடியாக வேறு குடியிருப்பை ஒதுக்கித்தர வேண்டும் எனவும் கூறினார். எளிமையாக இன்றய காலத்தில் வாழும் அரசியல் வாதிகளுக்கு சோதனை மேல் சோதனைதான் போலும் என்று பொதுமக்கள் கிசுகிசுக்கின்றனர்.