வீட்டு வசதி வாரிய கட்டிடங்கள்… 276.15 கோடி மதிப்பில் முதல்வர் தொடங்கி வைப்பு.!
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வீட்டு வசதி வாரியத்தின் 276.15 கோடி மதிப்பிலான கட்டிடங்களை தொடங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 276.15 கோடி மதிப்பிலான கட்டிடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிகக்கட்டிடங்கள், சமுதாயக் கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் இன்று திறந்து வைத்துள்ளார்.
வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு முதல்வர் ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கினார்.